Theri-251115-012இளையதளபதி விஜய் நடித்து வரும் 59வது படத்திற்கு ‘தெறி’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டு சூப்பரான ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.

‘தெறி’ திரைப்படம் போலீஸ் ஸ்டோரியுடன் கூடிய அதிரடி ஆக்சன் படம் என்பதால் இயக்குனர் அட்லி இந்த படத்தின் நான்கு அதிரடி சண்டைக்காட்சிகள் வைத்துள்ளதாகவும், ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வெவ்வேறு சண்டைப்பயிற்சியாளரின் உதவியோடு சண்டைக்காட்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் எஸ்.எஸ்,ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன ‘பாகுபலி’ படத்திற்கு சண்டைப்பயிற்சி அமைத்த ஹாலிவுட் சண்டைப்பயிற்சி இயக்குனர் Kaloian Vodenicharov என்பவர் ‘தெறி’ படத்தில் ஒரு அதிரடி சண்டைக்காட்சியை அமைத்து வருகிறார் என்றும் இந்த சண்டைக்காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இந்த படத்தின் பாடல்களுக்கு அட்லி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த படத்தின் ஐந்து பாடல்களை புலமைப்பித்தன், கபிலன், முத்துகுமார், பா.விஜய், ரோகேஷ் ஆகிய ஐந்து பாடலாசிரியர்கள் எழுதியுள்ளனர். இவற்றில் உலக லோக்கல் தர டிக்கெட் பாடல் எனப்படும் விஜய்யின் அறிமுக பாடலின் வரிகள் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

‘தெறி’ படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
English summary-Kaloian Vodenicharov the stunt choreographer who worked in film Baahubali will be choreographing a high volatile action sequence for the film Theri which has Vijay in the lead role.