parking-301115சென்னை ஐகோர்ட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழக்கு காரணமாக வருகை தருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் இருசக்கர, நான்கு சக்கர வாகங்களில் வருவதால் இவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகராட்சி என்எஸ்சி போஸ் சாலையில் இலவச வாகன நிறுத்துமிட வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக ஐகோர்ட்டுக்கு வரும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி தங்கள் வாகனங்களை பாதுகாப்புடன் நிறுத்தி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 16ஆம் தேதி முதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இதனால் ஐகோர்ட் வளாகப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதில், கீழமை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள், முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக வருகிறவர்கள், ஐகோர்ட் எதிரே என்எஸ்சி போஸ் சாலையில் தெற்கு பகுதியில் ஒரு வழி சாலையாக்கி, ஒப்பந்ததாரரிடம் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் வாகனங்களை நிறுத்தும் நிலை இருந்தது.

இந்நிலையில், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கீழமை நீதிமன்ற வளாகப் பகுதியில் வழக்குரைஞர்கள் வாகனங்களை நிறுத்தவும் இடம் இல்லை. இதனால் என்எஸ்சி போஸ் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குரைஞர்கள் ஐகோர்ட் பாதுகாப்பு குழுவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து என்எஸ்சி போஸ் சாலை தெற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, அப்பகுதியில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐகோர்ட்டுக்குள் வழக்கு தொடர்பாக தாமதமின்றி விரைந்து செல்லும் வகையில், நான்கு நுழைவுச் சீட்டு வழங்கும் கவுன்ட்டர்களும் தொடங்கப்பட்டுள்ளன.English summary-Free parking lot near Madras High Court