சென்னையில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் மனித நேயத்துடன் ஏராளமானோர் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். மத்திய அரசு, பிற மாநில அரசு, திரையுலக நட்சத்திரங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏராளமான தொழிலதிபர்கள் நிதி அளித்தனர். அவர்களுடைய விபரங்கள் வருமாறு:
1. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் ரூ.5 கோடி.
2. சத்குரு ஸ்ரீ மாதா அம்ரிதாநயதமயி தேவி அவர்களின் சார்பில், மாதா அம்ரிதாநயதமயி மடத்தின் அறங்காவலர் சுவாமி இராமகிருஷ்ணாநயதா புரி ரூ.5 கோடி
3. டபே லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.3 கோடி
4. ஜாய் ஆலுகாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜாய் ஆலுகாஸ் ரூ. 3 கோடி
5. இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன் ரூ. 2 கோடி
6. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஓய்.கே. கூ ரூ. 2 கோடி
7. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் பி. ரமேஷ் பாபு ரூ. 1 கோடி.
8. சிட்டி யூனியன் பாங்க் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் என். காமகோடி ரூ. 1 கோடி.
இன்று ஒருநாளில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் 22 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
English summary-Chief Minister’s Public Relief Fund,Rs.22 crores collected today