election-812152016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வெளியானது. புதிய வாக்காளர்களின் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் கடந்த அக்டோபர் 24-ந்தேதி வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ள பாதிப்பு இருந்து வரும் காரணத்தால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான படிவங்களை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலை 2016ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English summary-Election commission postpones voters list release