students-141115சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்கள் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான நகல் சான்றிதழ் வழங்கும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவக்கல்லூரியும் சான்றிதழ் வழங்க விரைவில் சிறப்பு முகாமை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறுகையில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக கல்விச் சான்றிதழ்களை இழந்த மருத்துவ மாணவர்களுக்கு அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சாரா கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கல்விச் சான்றிதழ் தேவைப்படுவோர் இந்தச் சிறப்பு முகாம்களில் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை முகாம்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” இவ்வாறு டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.

English summary-Special camp for those who lost their medical certificates in the recent flood