trains-191215-1சென்னையில் அலுவலகங்கள் செல்பவர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருப்பது மின்சார ரயில்களே. சாலை போக்குவரத்தில் டிராபிக் இடர்பாடுகள் அதிகம் இருப்பதால் பெரும்பாலானோர் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டி-சைதாப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக பயணிகள் சிறப்பு ரெயில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது:

ஞாயிறு காலை 8.45 மணியில் இருந்து மாலை 4.45 மணி வரை பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 8.45, 9.05, 9.40, 10.45, 11.30, 11.45 மதியம் 12.15, 1.00, 1.50, 2.25, 2.50 மற்றும் பிற்பகல் 3.05 மணிக்கு சென்னை கடற்கரைக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாளை காலை 9.45, 10.15, 11.00, 11.15, மதியம் 12.00, 12.45, 1.15, 1.30, 2.00, 2.30 மற்றும் பிற்பகல் 3.00, 3.15, மாலை 4.15, 4.30, 4.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.45, 10.30, 10.45, 11.30, 11.45, மதியம் 12.15, 12.45, 1.00, 1.30, 2.00, 2.30, பிற்பகல் 3.00, 3.15, 3.30 மாலை 4.00, 4.30 மற்றும் 4.45 மணிக்கு தாம்பரத்திற்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.30, 10.15, 11.15 மதியம் 12.00, 12.30, 1.15, 1.45, 2.15, 2.45, பிற்பகல் 3.45 மற்றும் மாலை 4.15 மணிக்கு செங்கல்பட்டிற்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 10.00 மற்றும் 11.00 மணிக்கு திருமால்பூருக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary-Alterations in the pattern of Chennai suburban train services