tennis-191215கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 20வது ஆண்டாக அடுத்த மாதம் அதாவது 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஜனவரி 10ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த போட்டியில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவரும் கடந்த முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்டான் வாவ்ரிங்கா உள்பட பல சர்வதேச பிரபல டென்னிஸ் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த போட்டிகளுக்கான சீசன் டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. ரூ.5,000, ரூ.3000, ரூ.1500 என மூன்று விலைகளில் கிடைக்கும் டிக்கெட்டுகளை www.bookmyshow.com என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக டிக்கெட் வேண்டுபவர்கள் www.aircelchennaiopen.org என்ற முகவரிக்கு சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் ஸ்டேடியத்திலும் விற்பனை செய்யப்படும். ஸ்டேடியத்தில் டிக்கெட்டுக்களை டிசம்பர் 25ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Chennai open tennis 2016 date announced