exam-191215கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி டிசம்பரில் ஆரம்பிக்கவிருந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளம் ஓய்ந்துள்ளதால் அரையாண்டு தேர்வுகளின் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணையை நேற்று தமிழக அரசு வெளியிடப்பட்டது. ஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:

தேதி பாடம்

11-1-2016 தமிழ் முதல் தாள்
12-1-2016 தமிழ் இரண்டாம் தாள்
13-1-2016 ஆங்கிலம் முதல் தாள்
14-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்
18-1-2016 வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
19-1-2016 கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்,கணக்குப்பதிவியல் மற்றும்தணிக்கையியல் (தியரி),உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, ‘நியூட்ரிசன் அன் டயாடெடிக்ஸ்’, ‘டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்’,அரசியல் அறிவியல், நர்சிங்

21-1-2016 இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை, ஆட்டோ-மெக்கானிக், ஜெனரல் மசினிஸ்ட்’, ‘எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்’, ‘டிராட்ஸ்மென் சிவில்’, ‘எலக்ட்ரிக்கல் மசின்ஸ் அன் அப்ளையன்சஸ்’, ‘டெக்ஸ்டைல் டெக்னாலஜி’

23-1-2016 வேதியியல், கணக்குப்பதிவியல்
25-1-2016 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
27-1-2016 தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியல், மேம்பட்ட மொழி (தமிழ்), புள்ளியியல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:

11-1-2016 தமிழ் முதல் தாள்
13-1-2016 தமிழ் இரண்டாம் தாள்
18-1-2016 ஆங்கிலம் முதல் தாள்
20-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்
22-1-2016 கணிதம்
25-1-2016 அறிவியல்
27-1-2016 சமூக அறிவியல்

இந்த தேதிக்கு முன்னதாக தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-SSLC & plus two half yearly exam time table released