பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக இணையதளத்தின் மூலம் பணம் அனுப்பும்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து பாரத ஸ்டேட் வங்கி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வங்கியின் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கோளாறு சரிசெய்யப்படும் வரை இணையதள வங்கி சேவையை வாடிக்கையாளர்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் பயன்படுத்துமாறும் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், பகல் நேரங்களில் இந்தக் கோளாறு தொடருகிறது.
ஆகையால் பகல் நேரங்களில் தவிர்த்து, அதிகாலை, மாலை நேரங்களில் இணையதள வங்கி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிவருகிறது. இதில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துகிறோம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
English Summary:Internet banking service: State Bank’s new announcement.