Tamilnadu-policeசென்னை உள்பட தமிழக காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஒருசில காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 16 எஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:

1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த முத்துசாமி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்த சாமுண்டீஸ்வரி சென்னை போலீஸ் பயிற்சிப் பள்ளி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு போலீஸ் பயிற்சி எஸ்பியாக இருந்த லலிதா லட்சுமி சென்னை மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையராகமாற்றப்பட்டுள்ளார்.

4.சென்னை மத்திய துணை ஆணையராக இருந்த செல்வகுமார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும் இடமாற்றம் மாற்றப்பட்டுள்ளார்.

5. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேந்திரன் ஆவடி காவல் மைய கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ஆவடி காவல் மண்டல கமாண்டன்ட் ராதிகா, சென்னை சிபிசிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சென்னை சிபிசிஐடி எஸ்பியாக இருந்த பெருமாள் திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. திருவல்லிக்கேணி துணை ஆணை யராக இருந்த அனில்குமார் கிரி, அரியலூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

9. அரியலூர் மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. சிவகங்கை எஸ்பியாக இருந்த துரை சென்னை போக்குவரத்துப் பிரிவு (கிழக்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை ஆணையராக இருந்த ராஜேந்திரன் மாதவரம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. மாதவரம் துணை ஆணையராக இருந்த விமலா சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

13. புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த சுதாகர், அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

14. அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த மயில்வாகனன் புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

15. சென்னை கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சிவக்குமார், கோயமுத்தூர் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16.கோயமுத்தூர் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக இருந்த ராஜசேகரன் சென்னை கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:Relocation Of the 16 S.P in Tamilnadu include Chennai.