electricityboardசென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மின்கட்டணம் செலுத்த ஜனவரி மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த சலுகை டிசம்பர் மாத மின் கட்டணத்திற்கு மட்டுமே என்றும் நவம்பர் மாத கட்டணங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்’ என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்புகளுக்கான மின் கட்டணங்களை செலுத்த ஜனவரி வரை அவகாசம் அளிப்பதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், குடியிருப்புகளுக்கான நவம்பர் மாத மின் கட்டணத்தை செலுத்துவோரிடம், மின்சார வாரியம் அபராதம் வசூலிப்பதாக பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொதுமக்களின் தரப்பில் இருந்து கூறப்படும்போது, ‘நவம்பர் மாதம் முதலே கனமழை பெய்து வருகிறது. அதனால், மின்கட்டணங்களை ஜனவரி மாதம் வரை செலுத்த அவகாசம் அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், நவம்பர் மாதம் எடுக்கப் பட்ட மின் அளவீடுகளுக்கு தற்போது கட்டணம் செலுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் கூறுகிறது. அரசின் அறிவிப்பை நம்பி மின்கட்டணம் செலுத்தாமல் இருந்தவர்கள், அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, ‘வெள்ள பாதிப்பு காரணமாக மின் கட்டணங்கள் செலுத்த ஜனவரி மாதம் வரை அரசு அவகாசம் அளித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு டிசம்பர் மாத மின் கட்டணங்களுக்கு மட்டுமே பொருந்தும். நவம்பர் மாத மின் கட்டணங்கள், மழைக்கு முன்பே வீடுகளில் அளவீடு செய்து நிர்ணயிக்கப்பட்டது.

குடியிருப்புகளுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதே தவிர, வணிக நிறுவனங்களுக்கு இல்லை. அதனால், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் வழக்கம் போல் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

English Summary:Without the payment of fines. Applicable only for December. Electricity Board officials.