ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் இந்திய குடியரசுத் தின விழா சிறப்பாக நடைபெற திட்டமிட்டுள்ளதை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்தில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
இந்திய குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதியிலும், ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22, 24 ஆகிய தேதிகளிலும் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு வாகனங்களும் பிற வாகனங்களும் திருப்பிவிடப்படும்.
மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலையை நோக்கி செல்லும் வாகனங்கள், மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் வாகனங்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலையை நோக்கி செல்லும் வாகனங்கள் உள்பட காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரையான அனைத்து சந்திப்பு சாலைகளிலும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
English Summary: Chennai Traffic Changed on Account of Republic day Parade Occasion.