chennai-corporation-3110201விரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ள சென்னை நகரை மேலும் மெருகூட்ட சென்னை பொதுமக்களின் ஒத்துழைப்பை சென்னை மாநகராட்சி அணுகியுள்ளது. சென்னையை பசுமை நகராக மாற்ற ஏராளமான மரங்களை நடுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை மாநகரை பசுமை போர்த்திய நகராக மாற்ற விருபும் நபர்கள் மரங்களை நட விரும்பினால் சென்னை மாநகராட்சியை அணுகலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மரம் நட விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு உகந்த ராசி, நட்சத்திர மரங்களையும், தங்களின் நெருங்கிய மனிதர்களின் பிறந்தநாள், திருமணநாள், இறந்தோர் நினைவாக அவர்கள் கோரும் இடத்திலேயே மரம் நட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் பாதுகாக்க விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பம் நிபந்தனைக்கு உள்பட்டு வரவேற்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 10 அடி வளர்ந்த மரக்கன்றுகளாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. www.chennaicorporation.gov.in -என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Chennai corporation guides for those who wish for Tree planting .