சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி.அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு குறித்த விவரம் பின்வருமாறு:
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதனால், தமிழக காவல் துறையில் அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary: 25 DSP transferred in Tamilnadu state. DGP Ashok directive.