centraljail15316தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், மகளிர் சிறப்பு சிறைகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக பல்வேறு புகார்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் சிறைகளின் பாதுகாப்பை அதிகப்படுத்த மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும், அதே நேரத்தில் சிறைக் கைதிகள், சிறை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் அமைக்கப்பட உள்ளதாக சிறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை புழல் (1 மற்றும் 2), வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 9 மத்திய சிறைகளும், திருச்சி, வேலூர், புழல் ஆகிய 3 இடங்களில் மகளிர் சிறப்பு சிறைகளும் உள்ளன. வெடி பொருட்கள், ஆயுதங்கள், செல்போன்கள் உள்ளே கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் விதத்தில் மேற்கண்ட அனைத்து சிறைகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக சிறைத் துறை உயரதிகாரிகள் ‘செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறைகளுக்காக ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் 12 மெட்டல் டிடெக்டர் கருவிகள் வாங்கி பொருத்தப்பட உள்ளன. சிறைக்கு கொண்டு வரப்படும் கைதிகள் செல்போன், ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளனரா என தற்போது ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்படுகிறது. மெட்டல் டிடெக்டர் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தால் இது போன்ற தர்மசங்கடங்கள் தவிர்க்கப்படும்.

மேலும், கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களில் செல்போன், சிம்கார்டு, சிறு ஆயுத களை மறைத்து எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போவதும் சில நேரம் நடக்கும். மெட்டல் டிடெக்டரால் சோதனை செய்யப் பட்ட பிறகே, உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படும் என்பதால், சிம்கார்டு, ஆயுதங்கள் போன்ற வற்றை மறைத்து உள்ளே அனுப்ப இனி இயலாது. எனவே, சிறைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

இந்த சிறைகளில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களும் நிறுவப்பட உள்ளன. ரூ.52 லட்சம் மதிப்பில் எதிர்சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் 12 இயந்திரங்கள் பொருத் தப்பட உள்ளன. 9 மத் திய சிறை களில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு இயந்திரங்களும், மகளிர் சிறைகளில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களும் பொருத்தப்பட உள்ளன. கைதிகள், சிறை ஊழியர் களுக்கு இனி பாதுகாப்பான, சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். ரூ.52 லட்சம் மதிப்பில் எதிர்சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் 12 இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

English Summary: Metal detector in Tamilnadu Prison.