தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக ஒருசில மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக 4 மாவட்ட ஆட்சி தலைவர்களையும் 5 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை மாற்றியுள்ளது. மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களை மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் பெயர்களை தற்போது பார்ப்போம்.

மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள்

1. வேலூர் மாவட்ட கலெக்டராக இருந்த நந்தகோபால் மாற்றப்பட்டு ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தேனி மாவட்ட கலெக்டராக இருந்த என்.வெங்கடாச்சலம் மாற்றப்பட்டு எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த வி.சம்பத் மாற்றப்பட்டு கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திண்டுக்கல் கலெக்டராக இருந்த டி.என்.ஹரிஹரன் மாற்றப்பட்டு சத்தியபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்

1. சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுப்புலட்சுமி மாற்றப்பட்டு அமித் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த உமா மாற்றப்பட்டு நிஷா பாார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராஜேஸ்வரி மாற்றப்பட்டு சந்தாேஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பி.மகேஸ்வரன் மாற்றப்பட்டு சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. இதேபோல், சென்னை ஆவடி, திருச்செங்கோடு, வாணியம்பாடி, அருப்புக்கோட்டை, ஒட்டன்சத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

English Summary : Election Commission took action by suddenly changing Collector’s and SP.