முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதாவது மே 14ஆம் தேதி முதல் தேர்தல் நாளான மே 16ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும், அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், மே, 19ம் தேதி ஒருநாள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே தேர்தல் காலகட்டத்தில் மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
English Summary : 4-days-after-the-tamil-nadu-assembly-elections-itll-be-closed-tasmac.