சென்னை நகரில் உள்ள 16 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுகவும், 6 தொகுதிகளை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர், தியாகராய நகர், மயிலாப்பூர், பெரம்பூர், விருகம்பாக்கம், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, திரு.வி.க. நகர்,வேளச்சேரி, வில்லிவாக்கம்,சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, எழும்பூர், துறைமுகம் ஆகிய 10 தொகுதிகளை திமுக கைப்பற்றி உள்ளது.

சென்னை தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்;

1. கொளத்தூர்
மு.க.ஸ்டாலின் (திமுக) 91303
ஜே.சி.டி.பிரபாகர் (அதிமுக) 53573
பி.மதிவாணன் (தேமுதிக) 6276
கே.டி.ராகவன் (பா.ஜ.க) 5289
எஸ்.கோபால் (பா.ம.க) 3022

2. அண்ணா நகர்
எம்.கே. மோகன் (திமுக) 72207
எஸ்.கோகுல இந்திரா (அதிமுக) 70520
கே.சுரேஷ் (பா.ஜ.க) 8820
மல்லிகா தயாளன் (மதிமுக) 6491
ஏ.எம்.அகிலேஷ் (பா.ம.க) 5619

3. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
ஜே.அன்பழகன் (திமுக) 67982
ஏ.நூர்ஜஹான் (அதிமுக) 53818
தாமரை கஜேந்திரன் (பா.ஜ.க) 6281
வி.அப்துல்லா சேட் (தேமுதிக) 5507
ஏ.வி.ஏ.கசாலி (பா.ம.க) 2511

4. ஆர்.கே. நகர்
ஜெ.ஜெயலலிதா (அதிமுக) 97218
சிம்லா முத்துச்சோழன் (திமுக) 57673
வி.வசந்தி தேவி (வி.சி.க) 4195
ஆக்னஸ் (பா.ம.க) 3011
எம்.என்.ராஜா (பா.ஜ.க) 2928

5. எழும்பூர் (தனி)
கே.எஸ்.ரவிச்சந்திரன் (திமுக) 55060
பரிதி இளம்வழுதி (அதிமுக) 44381
எம்.வெங்கடேசன் (பா.ஜ.க) 7159
டி.பிரபு (தேமுதிக) 6321
ஏ.ராஜேந்திரன் (பா.க) 1814

6. துறைமுகம்
பி.கே.சேகர் பாபு (திமுக) 42071
கே.எஸ்.சீனிவாசன் (அதிமுக) 37235
கிருஷ்ணகுமார் நதானி (பா.ஜ.க) 13357
அமீர் ஹம்ஸா (எஸ்டிபிஐ) 4161
முராத் புஹாரி (தேமுதிக) 1970

7. மயிலாப்பூர்
ஆர்.நடராஜ் (அதிமுக) 68176
கராத்தே ஆர்.தியாகராஜன் (காங்) 53448
கரு. நாகராஜன் (பா.ஜ.க) 11720
என்.சுரேஷ் குமார் (பாமக) 5806
ஏ.எஸ்.முனவர் பாஷா (த.மா.க) 4753

8. ராயபுரம்
டி.ஜெயகுமார் (அதிமுக) 55205
ஆர்.மனோகர் (காங்) 47174
சையத் ரஃபி பாஷா (எஸ்.டி.பி.ஐ.) 4345
எம்.ஆர்.ஜமீலா (பா.ஜ.க) 3562
பிஜூ சாக்கோ (த.மா.க) 3191

9.சைதாப்பேட்டை
மா.சுப்ரமணியன் (திமுக) 79279
சி.பொன்னையன் (அதிமுக) 63024
வி.காளிதாஸ் (பா.ஜ.க) 6000
டி.ஆர்.சகாதேவன் (பா.ம.க) 5913
எஸ்.ஏழுமலை (இந்திய கம்யூ) 5221

10. திரு.வி.க. நகர் (தனி)
பி.சிவகுமார் (திமுக) 61744
வி.நீலகண்டன் (அதிமுக) 58422
சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூ) 5702
வனிதா மணி (பாமக) 2056
கௌரி (நாம் தமிழர்) 1831

11. ஆயிரம் விளக்கு
கு.க.செல்வம் (திமுக) 61726
பா.வளர்மதி (அதிமுக) 52897
எம்.சிவலிங்கம் (பா,ஜ.க) 8516
சி.அம்பிகாபதி (மதிமுக) 7805
வி.ரங்கன் (பா.ம.க) 3968

12. வேளச்சேரி
வாகை சந்திரசேகர் (திமுக) 70139
சி.முனுசாமி (அதிமுக) 61267
ஸ்ரீதரன் (பாஜக) 14472
வி.என்.ராஜன் (தேமுதிக) 9654
வினோபா பூபதி (பா.ம.க) 6809

13. பெரம்பூர்
பி.வெற்றிவேல் (அதிமுக) 79974
என்.ஆர்.தனபாலன் (திமுக) 79455
ஏ.செள்ந்தராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ) 10281
ஆர்.பிரகாஷ் (பா.ஜ.க) 4582
எம்.வெங்கடேஷ் பெருமாள் (பா.ம.க) 3685

14. விருகம்பாக்கம்
வி.என். விருகை ரவி (அதிமுக) 65979
கே.தனசேகரன் (திமுக) 63646
தமிழிசை செள்ந்தர்ராஜன் (பாஜக) 19167
பி.பார்த்தசாரதி (தேமுதிக) 9730
சி.எச்.ஜெயராஜ் (பாமக) 3945

15. வில்லிவாக்கம்
பி.ரங்கநாதன் (திமுக) 65972
தாடி ம.ராசு (அதிமுக) 56651
டி.பாண்டின் (தேமுதிக) 8234
எம்.ஜெயசங்கர் (பாஜக) 6438
வி.சுப்ரமணியன் (பாமக) 4193

16. தியாகராய நகர்
பி.சத்தியநாராயணன் (அதிமுக) 53207
என்.எஸ்.கனிமொழி (திமுக) 50052
எச்.ராஜா (பாஜக) 19888
வி.குமார் (தேமுதிக) 6210

English Summary : Election result of 16 constituencies in Chennai.