நேற்று தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதாவும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுனர் ரோசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் நாளை அதாவது புதன்கிழமை மாலை 7 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய நான்கு அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
1. ஜி.பாஸ்கர் – காதி, கிராமத் தொழில் துறை அமைச்சர்
2. சேவூர் எஸ்.ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
3. நிலோபர் கஃபில் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
4. பாலகிருஷ்ணா ரெட்டி – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
ஏற்கெனவே வழங்கப்பட்ட துறைகளைப் பிரித்து மேற்கண்ட 4 அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த நான்கு அமைச்சர்களை சேர்த்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : 4 more new ministers in Tamil Nadu.