சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி சென்னையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறிய சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
1. ரெயில்களோடு இணைந்து பயணிப்போம்’ என்ற நிகழ்வு கடந்த ஒரு வார காலமாக தெற்கு ரெயில்வேயில் கொண்டாடப்பட்டது. இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 356 ஆய்வுகளில் 1,072 ரெயில்வே அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். 3,611 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.
2. முறையான டிக்கெட் எடுக்காமல் சென்றதற்காக பயணிகளிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
3. 92% ரெயில்கள் சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளன.
4. தாம்பரம் ரெயில் முனையம் அமைக்கும் பணி அடுத்த மாதம் நிறைவடையும்.
5. 2019-20-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் ‘பயோ-டாய்லெட்’ வசதி ஏற்படுத்தப்படும்.
6. இதுவரை ரூ.27 கோடியில் 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள ரெயில் நிலையங்களில் ரூ.66 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
7. அடுத்த 3 ஆண்டுகளில் 750 ஆளில்லா ரெயில் நிலையங்கள் மூடப்படும்.
8. சென்னை- கன்னியாகுமரி இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி இந்தாண்டு நிறைவில் முடிந்துவிடும்.
9. பெரம்பூரில் ரூ.17 கோடி செலவில் ரெயில்வே மருத்துவமனை அமைக்கும் பணி இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடையும்.
10. சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரெயில்களை இயக்க சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இதுபோல பல திட்டங்களை தெற்கு ரெயில்வே மேற்கொள்ள உள்ளது.
English Summary: CCTV Camera in All Railway Station.Southern Railway Announced.