kabali3616சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அட்டக்கத்தி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளோடு முதன்முதலாக இந்த படம் மலாய் மொழியிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்படம் ஒன்று மலாய் மொழியில் டப் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சுமார் 6000 திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் வசூல் ‘பாகுபலி’ படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள ‘கபாலி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

English Summary: Rajini’s kabali Audio Release Date Announced.