free_bus_passதமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்றுத் தர அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் மாணவர்களின் விபரங்களை விரைவில் சமர்பிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு போக்குவரத்துத் துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கல்வி மற்றும் போக்குவரத்துத் துறை இணைந்து புதிய பாஸ்களை வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஆண்டை போலவே இந்த கல்வி ஆண்டிலும் 27 லட்சம் பஸ் பாஸ் அளிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியபோது, “ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் அளிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்த உள்ளோம்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளி நிர்வாகிகள் தலைமை அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எல்லைக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பல்லவன் இல்லத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது http://www.mtcbus.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி நிர்வாகிகள் மாணவர்களின் விபரங்களை வழங்கிய பிறகு உடனுக்குடன் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

English Summary: When the free bus passes to students. Transport sector data