மும்பையில் இன்று நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் வங்கிக் கொள்கைக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை என அவர் சற்று முன்னர் உறுதியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக இன்றைய பங்குச்சந்தையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கருதியும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தினால் ஏற்படும் பணவீக்க சூழலை கருதியும் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ‘ரெப்போ’ 6.50% ஆக தொடருகிறது. அதேபோல், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் சி.ஆர்.ஆர் 4 சதவீதமாக தொடருகிறது. நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் 2-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் தற்போது நடந்து முடிந்துள்ளது. அடுத்த கூட்டம் வரும் ஆகஸ்டு 9-ந்தேதி நடைபெறுகிறது.
English Summary : No change in interest rates. Raghuram Rajan Ari