சென்னையில் திருமணம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்களுக்கு மொத்தமாக பால் வாங்க விரும்பும் வாடிக்கைகளுக்கு என ஆவின் நிறுவனம் புதிய வசதி ஒன்றை செய்துள்ளது. இதற்கென தனி செல்போன் நம்பர்களை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நம்பர்களில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கூறியுள்ளார்.
நேற்று தலைமை செயலகத்தில் ஆவின் பால்-பால் பொருள்கள் விற்பனை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மேலும் கூறியதாவது: ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் என்ற அளவில் பால் கொள்முதல் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பால்-பால் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும், நுகர்வோர்கள் தங்களுக்குத் தேவையான பால் அட்டைகளை அடையாளச் சான்றிதழ்-இருப்பிடச் சான்றிதழ் அளித்து ஆவின் வட்டார அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக ஆவின் பால் வாங்குவோருக்கு வசதியாக ஆவின், 5 லிட்டர் பாக்கெட்டுகளில் நிலைப்படுத்திய பாலை விற்பனை செய்து வருகிறது. சமையல் கலைஞர்கள் ஆவின் பாலை மொத்தமாக ஆர்டர் செய்யும்போது அவர்களுக்கு லிட்டருக்கு அதிகபட்ச விற்பனை விலையிலிருந்து ஒரு ரூபாய் சிறப்புத் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
ஆவின் பாலை மொத்தமாக ஆர்டர் செய்ய விரும்பும் நிறுவனங்கள் 94455 30503 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். நுகர்வோர்கள் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்க, ஆவின் நிறுவனத்தின் 24 மணி நேர நுகர்வோர் நலன் மற்றும் சேவை மையத்தை 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 2346 4578 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.
English Summary: Aavin milk Helpline numbers get to Wholesale Milk Supply.