aadharcardஆதார் எண்ணுக்காக தேசிய மக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை உறுதிப்படுத்தும் பணிகள் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் புகைப்படம், முகவரி ஆகிய விவரங்கள் அடங்கிய காகித வடிவிலான ஆதார் தாற்காலிமாக இப்போது அளிக்கப்படுகிறது.

இதற்கு, ஆதார் எண்ணுக்காக அளிக்கப்பட்ட தகவல்களை இறுதி செய்வது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் அளித்துள்ள தகவல்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறைச் செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்டார்.

English Summary : People log detail: to ensure the details of the mission extension until August