தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவின் பால் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான பாலை, நியாயமான விலையில் வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் தற்போது சலுகை விலையில், ஆவின் “லாங் லைஃப்’ குலோப் ஜாமுன் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த தகவலை நேற்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: நுகர்வோர் தேவையைக் கருத்தில் கொண்டு, பால் உப பொருள்கள், இனிப்பு வகைகளைத் தயார் செய்து ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் பொருள்களுக்கு நுகர்வோர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. நுகர்வோர்கள் மகிழ்ச்சியுறும் வகையில், ஆவின் “லாங் லைஃப்’ குலோப் ஜாமுன் அதிகபட்ச சில்லறை விற்பனையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் “லாங் லைஃப்’ குலோப் ஜாமுன் 30 நாள்கள் சுவையும், தரமும் குறையாமல் இருக்கும். மேலும், உடனே சாப்பிட ஏதுவாக ஸ்பூனுடன் அழகிய பிளாஸ்டிக் டப்பாக்களில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, 125 கிராம் பேக்-க்கு ரூ.5 சலுகை தள்ளுபடியும், 250 கிராம் பேக்- க்கு ரூ.15-ம் சலுகை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் “லாங் லைஃப்’ குலோப் ஜாமுன் ஆவின் பாலகங்கள், உரிமம் பெற்ற சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Kulopjam at a discounted rate. Decision of the Aavin firm in Chennai