ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் டிரைவிங் லைசென்ஸ் கட்டணத்தில் அரசு கைவைக்கப் போகிறதாம். இதுதொடர்பான திட்ட வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அண்மையில், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது. இப்போது ரூ.320-க்கு புதிதாக லைசென்ஸ் எடுத்துவிடலாம். புதிய கட்டணத்தின்படி ரூ.1200 செலுத்த வேண்டுமாம்.
பழகுநர் உரிமம் எனப்படும் எல்எல்ஆர் பெறுவதற்கான தேர்வை எழுதுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் இப்போது ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் ரூ.300-ஆக உயரவுள்ளது.அதேபோல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.200 ஆக உயர்கிறது. சர்வதேச அளவிலான ஓட்டுநர் உரிமக் கட்டணம் ரூ.500-இலிருந்து ரூ.1000-ஆக அதிகரிக்க உள்ளது.
English Summary :Driving Licence fee rises!