தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். அவர் பந்தை சேதப்படுத்தியது தெரியும் என ஸ்மித் ஒத்துக் கொண்டார்.
இதனால் உடனடியாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்தார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த பிரச்சினை பூதாகரமாக எழுந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஸ்மித் இடம்பெறுவாரா? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐசிசி வழங்கும் தண்டனைக்குப்பின்தான் முடிவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary: Rahane excited to captain RR in IPL 2018