திருச்சியில் மோட்டார் பைக்கில் சென்ற போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உடைத்ததால் வண்டியில் சென்ற தம்பதியர் ராஜா, உஷா இருவரில், உஷா சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு பெரும் போராட்டத்தை நடத்தினர். எதிர்பாராமல் மரணமடைந்த உஷா குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 7 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 10 லட்ச ரூபாய் நிதியுதவியை அறிவித்தார். அந்தத் தொகையை இன்று திருச்சியில் உஷா குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் கொடுத்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

உஷாவின் கணவரிடம் 5 லட்ச ரூபாயும் உஷாவின் அம்மா லூர்து மேரி, சகோதரர் ராபர்ட் ஆகியோரிடமும் 5 லட்ச ரூபாய் வழங்கினார்.

குடும்பத்தினர் கண்ணீருடன் அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கமல்ஹாசன் ஆறுதல் அளித்துத் தேற்றினார்.

English Summary: Kamal Hassan has 10 lakh assistance to the family members of Trichy Usha