சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் ஆறாவது சிறப்பு புத்தகக் கண்காட்சி வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 6 நாட்கள் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெறுகிறது. அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும்.

20-ம் தேதி மாலை 5 மணி அளவில் வரியியல் வல்லுநர் ச.ராஜரத்தினம் தலைமையில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறும். அடுத்த 5 நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கும்.

இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி மாலை 6 மணி அளவில் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடக்கும் புத்தகர் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொள்ளும் கவிஞர் வைரமுத்து புத்தகர் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 24-ம் தேதி மாலை 6 மணி அளவில் நான் ஏன் (சு)வாசிக்கிறேன்? என்ற தலைப்பில் கவிஞர் ஜோ மல்லூரி, இயக்குநர் கவிதாபாரதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் நிறைவு விழா நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 9500130417-ல் தொடர்பு கொள்ளலாம்.

English Summary: Chennai Puthaga Sangamam Book Fair from 20th April to 25th April.