நடிகர் அஜித்குமார் ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் ஷாலினிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
அஜீத், ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary: Ajith Shalini star couple of Kollywood had blessed with boy as their second child.