அட்சய திருதியையொட்டி ஆன்லைன் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள்.
சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம் தங்கம் வேண்டுமோ அதற்கான பணத்தை செலுத்தி அதை பொதுமக்கள் வாங்கலாம்.
ஊரடங்கு காலம் முடிந்ததும், எந்த கடைகளில் பதிவு செய்தனரோ, அந்த கடைக்கு சென்று பொதுமக்கள் தங்க காசாக வாங்கி கொள்ளலாம். நகையாக வேண்டும் என்றால், நகைக்கான செய்கூலி மற்றும் சேதாரத்துக்கு பணம் செலுத்தி வாங்கி செல்லலாம். இதற்காக, Stay Home Stay Safe Buy Online Tritiya 2020 என்ற கேப்ஷனுடன் அவை விற்பனை செய்து வருகின்றன.
ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவதில் மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம், அட்சய திருதியை நாளில், காலை 6.13 முதல், மதியம் 1.22 மணிவரை தங்கம் வாங்க நல்ல நேரமாக ஜோதிடர்கள் அறிவித்துள்ளனர்.