இந்தியா மற்றும் ரஷ்யாவில் வாழும் மக்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோயில் ஒற்றுமை உள்ளதா? என்பதை கண்டறியும் புதிய ஆய்வு ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஃப்ரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையும் ரஷிய ரத்த நாள ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தவுள்ள இந்த ஆய்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று சென்னையில் கையெழுத்தாகியது.

இதுகுறித்து ஃப்ரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் சஞ்சய் செரியன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”

இரண்டு நாடுகளிலும் சுமார் 50 சதவீதம் பேருக்கு இருதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. 10 சதவீதம் பேருக்காவது மரபணு தொடர்பான பிரச்னைகளினால் மாரடைப்பு ஏற்படுகிறது. இரு நாடுகளைச் சேர்ந்தவர்களில் மாரடைப்பை உண்டாக்குவதற்கான மரபணுக்களில் ஒற்றுமை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம் என்று கூறினார். மேலும் அவ்வாறு மரபணுக்களில் ஏற்படும் பிரச்னைகளை அந்தந்த நாடுகளில் கிடைக்கும் இயற்கை மருந்துகளைக் கொண்டு சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் இந்த ஆய்வில் இரண்டு நாடுகளிலும் 500 நோயாளிகளை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷிய ரத்தநாள ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஓரிகோவ் உள்பட இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

English Summary : Analysis of heart attack disease