ஆந்திராவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் ஒருவருக்கு வெற்றிகரமாக நேற்று பொருத்தப்பட்டது.
ஆந்திராவில் கடந்த 3ஆம் தேதி விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட மணிகண்டா என்ற 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி அவருடைய உடலில் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உடல் உறுப்புகள் பாதுகாப்புடன் வெளியே எடுக்கப்பட்டது. இவற்றில் இருதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மும்பையை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
முன்னதாக இருதயம் மற்றும் நுரையீரலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு மருத்துவமனைக்கு கொண்டு வர ‘க்ரீன் காரிடார்’ முறையில் சாலை போக்குவரத்து போலீஸாரால் ஒழுங்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Andhra Youth gives his Heart to Tamilnadu Youth.