பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவர்கள் இன்று முதல் தங்களுடைய ஹால் டிக்கெட்டுக்களை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வுகள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் தனித்தேர்வர்களுக்கு வரும் 11ஆம் தேதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட், மற்றும் அறிவியல் செய்முறை தேர்வு பதிவேடு உடன் ஏற்கனவே அறிவியல் பயிற்சி செய்த பள்ளியில் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படாது என்றும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

English Summary: Private candidates of Standard 10th can download their Hall Tickets from Today.