சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பு ஒன்று கூறியுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விரும்பும் பி.எச்.டி மாணவர்கள் மார்ச் 16ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்பங்களை சமர்க்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக விசாரணை மையத்தில் ரூ.25 கட்டணம் செலுத்தி பெறுக்கொள்ளலாம். அல்லது ‘பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பு மேலும் கூறியுள்ளது.

English Summary : Madras Universities Vice-graduation Ceremony to be held at the end of this month.Students are welcome to apply for their titles.