தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் தேர்வில், 11 மாணவர்கள் காப்பியடித்து எழுதியதாக பிடிபட்டனர்.

முதல் நாள் தேர்விலேயே 5 மாணவர்கள் காப்பியடித்ததாக பிடிபட்ட நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் தேர்விலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவர்களும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்களும், ராமநாதபுரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2 மாணவரும் என மொத்தம் 11 மாணவர்கள் காப்பியடித்தாகப் பிடிபட்டனர்.

பிடிபட்டவர்களில் 7 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க தனிப்படையினர் தீவிர சோதனை செய்யவுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை. வரும் திங்கட்கிழமை ஆங்கிலம் முதல் தாள் தேர்வுநடைபெறுகிறது.

English Summary : 11 students caught attempting malpractice during 12th public exams.