தமிழகத்தில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சோ்க்கை பெற திங்கள்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின், மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரிகள் அளவில்) மே 25 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்படும்.
இதையடுத்து, முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ம் தேதி வரையும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும்.
நடப்பாண்டில் மாணவர்கள் ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.50-ம், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2-ம் செலுத்தினால் போதுமானது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.