கோவை, மைசூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக மே 9 முதல் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12680) மே 9, 10, 16 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12679) சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்து புறப்படும்.

மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12610) மே 9, 10, 16 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12607) மே 9, 10, 16 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *