நாடு முழுவதும் ரயில் பயணிகள் முன்பதிவு செய்யாமல் நாள்தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அவர்களுக்கு பயணச் சீட்டு அச்சிடுவதற்காக 1,200 மெட்ரிக் டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்று ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு தேவையான ரயில் டிக்கெட்டுக்களை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையை மாற்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை நேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தொடக்கி வைத்தார். இந்த அப்ளிகேஷனை “கூகுல் பிளே ஸ்டோர்’ மூலமாகவும், “விண்டோஸ் ஸ்டோர்’ வழியாகவும் இந்த டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷனை டவுண்லோடு செய்தவுடன் ரயில்வே வாலட்’ மூலமாக பயணிகள் தங்களுக்கு தேவையான பயணித்திற்குண்டான பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன் பின்னர், பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்ட தகவல், பயணியின் செல்போனுக்கு அனுப்பப்படும். டிக்கெட் பரிசோதகரிடம் இதைக் காண்பித்தாலே போதுமானது.
மத்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாக, இந்த முறையை ரயில்வே தகவல் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்
இந்த ரயில்வே பயணச் சீட்டு அப்ளிகேஷன் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் 15 புறநகர் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்க விழாவில் தெரிவித்தார்.
சென்னையைப் பொருத்தவரை, சென்னை கடற்கரை, கோட்டை, பூங்கா, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், திருமயிலை, சென்னை சென்ட்ரல், பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
English Summary : Application train ticket. Introducing the new facility