10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளதாவது, ”தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
2016-17-ம் கல்வி ஆண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பம் வாங்கிய பாலிடெக்னிக் கல்லூரியில் ஜுன் மாதம் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” இவ்வாறு எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.
English Summary : Applications for Government polytechnic colleges.