டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் 67 இடங்களைப் பிடித்து வரலாறு காணாத வெற்றியை ஆம் ஆத்மி அடைந்துள்ளது.பாஜக 3 இடங்களையும் காங்கிரஸ் பூஜ்யத்தையும் பெற்றுள்ளன.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் பேசிய கெஜ்ரிவால், என்னை அச்சுறுத்தும் அளவிற்கு மக்கள் வெற்றியை தந்துள்ளனர். வெற்றி தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பெரும் வெற்றியால் ‘ இறுமாப்புடன் நாங்கள் இருக்க மாட்டோம் ‘- கட்சி தொண்டர்கள் யாரும் அகந்தை கொள்ள கூடாது.
மக்கள் எங்களிடம் பெரிய பொறுப்பை தந்துள்ளனர் . எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது ஆம்ஆத்மியின் வெற்றி .இவர்கள் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். ஏழை, பணக்காரன் என அனைவரும் சமமாக பாவிக்கப்படுவர். ஊழல் – வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம். பிரமாண்ட வெற்றியை தந்த மக்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். பெரும் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. உண்மையான சவால்கள் தொடங்கி இருக்கின்றன என்றார்
வெற்றி பெற்றுள்ளதால் அகந்தை அடைந்துவிடவேண்டாம் என்று தனது கட்சியினருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
பிப். 14ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார்.
English Summary: There are real challenges begin – Arvind Kejriwal .