சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள அந்தியோதயா ரயில் வள்ளியூர் ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) முதல் நின்று செல்லும் என வள்ளியூர் ரயில் பயணிகள் சங்கச் செயலர் எஸ்.ராஜ்குமார் தெரிவித்தார்.
சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மார்க்கமாக திருநெல்வேலிக்கு பகல் 12.05 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு வள்ளியூர் ரயில்நிலையம் வந்தடைகிறது.
தொடர்ந்து, பிற்பகல் 2.20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை சென்றடையும். நாகர்கோவிலில் 3.50 மணிக்கு புறப்பட்டு வள்ளியூருக்கு மாலை 4.20 மணிக்கு வந்துசேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு மாலை 5 மணிக்கும்,சென்னை தாம்பரத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கும் சென்றடைகிறது. இந்த ரயில்சேவையை வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ரயில் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.