சென்னை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும், தற்போது தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினருக்கான 15 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகவும், அதற்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு மற்றும் அட்மிஷன் முடிந்து மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் நடைபெற்று கொண்டு வரும் நிலையில் பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, பி.எஸ்சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியாலஜி- இமேஜிங் டெக்னாலஜி, ஆக்குபேஷனல் தெரபி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தொடங்கிய இந்த கலந்தாவ்ய், நேற்றைய இரண்டாம் நாளில், பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் உள்ள 410 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 184 என மொத்தம் 594 இடங்களும் நிரம்பிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இரண்டாம் நாள் கலந்தாய்வின் முடிவில் அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதால், இன்று தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினருக்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு வருகிற 27-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
English Summary:B.Sc Nursing Government Seats filled.