தமிழகத்தில் கடந்த ஆண்டு சென்னை தீவு கடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் பல வகையான உணவு பொருட்கள் இடம் பெற்றது. இந்த திருவிழாவில் மகளிர் சுய உதவி குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் விதமாக இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் சென்னையில் மாபெரும் உணவு திருவிழா நடைபெறவுள்ளது. இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த உணவு திருவிழா பங்கேற்க விரும்புவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். 9176483735 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இந்த உணவு திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
இது குறித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ”தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைக்கின்றோம்” என்றார்.