மத்திய அரசு சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டால், இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் அனைத்தும் மூடப்படும் நிலை ஏற்படும். இரு சக்கர வாகனத்தில் பழுது, திடீர் பழுதுகள் ஆகியவை ஏற்பட்டால் அந்த வாகனம் தயாரித்த உரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வ பழுது நீக்கும் நிலையத்தில் மட்டுமே பழுது பார்க்க வேண்டும் என்றும் இருசக்கர வாகங்களுக்கு அந்தந்த வாகன நிறுவனத்தின் ஒரிஜினல் உதிரிப்பாகங்களை மட்டுமே பொருத்த வேண்டும் என்றும் இந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் சுய தொழில் செய்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய வாகன சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் உள்ள வாகன பழுது நீக்கும் ஊழியர்கள் நாளை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு உள்ளதாக தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கத் தலைவர் பா.குப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
English Summary : Since Government issues a New Motor Vehicle Act that two wheelers should service on their authorized service centers, so Chennai Mechanic’s decided to fasting strike against the new act.