தெற்கு ரயில்வே முழுவதும் கண்ணாடி இழை கேபிள்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது அந்த பணி முடிவடைந்துவிட்டதாகவும், தற்போதைய நிலையில் தெற்கு ரயில்வேயில் 99% தகவல் தொடர்புகளுக்காக கண்ணாடி இழை கேபிள்கள் ( Optical Fiber Cable ) இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில் நுட்பங்கள் தெற்கு ரயில்வேயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரயில்களின் இயக்கம், கட்டுப்பாடு, பயணிகள் முன்பதிவு, வை ஃப ஆகியவை இந்தக் கண்ணாடி கேபிள்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவசர காலத்தில் சிக்னல்களை இயக்குவதற்கும் இவை பேருதவியாக உள்ளது.

மேலும் ரயில் விபத்துக்குள்ளாகும்போது எந்த இடத்தில் ரயில் விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடிக்கவும் பயன்படுகிறது. ஏப்ரல் 31 ஆம் தேதி வரை தெற்கு ரயில்வேயில் 4205 கிலோ மீட்டர் தூரத்துக்கு கண்ணாடி இழை கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 99 சதவீத தகவல் தொழில்நுட்பங்கள் கண்ணாடி இழை கேபிள்களால் இணைக்கப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Southern Railway is going to use all cables in Optical Fibers for communications.