சமீபத்தில் ஜிகர்தண்டா’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா கடந்த சில நாட்களாக ‘உறுமீன்’ நாயகி ரேஷ்மி மேனனை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் இருவரது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்பட பலர் நடித்திருக்கும் படம் ‘உறுமீன்’. இப்படத்தின் படப்பிடிப்பின் போது பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் இருவருமே இச்செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த செய்தியை அவர்கள் உறுதி செய்யவும் இல்லை.
இந்நிலையில், பாபிசிம்ஹா – ரேஷ்மி மேனன் இருவரது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் பங்குபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிச்சயதார்த்த தினத்தன்று திருமணத் தேதியை முறையாக அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து ரேஷ்மி மேனன் விரைவில் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், காமெடி நடிகர் கருணாகரன் உள்பட பலர் தங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
English summary-Bobby Simha to marry Urumeen co-star Reshmi Menon this month.