shankar-51115சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஷங்கரின் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதை முழுஅளவில் முடிக்கப்பட்டு, படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகளை ஷங்கர் டீம் செய்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் திரைக்கதையை ஹாலிவுட் திரைக்கதையாசிரியர்களின் உதவியால் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள அர்னால்ட் புதிதாக நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

திரைக்கதை விஷயத்தில் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாத ஷங்கர் இதற்கு ஒப்புக்கொள்வாரா? என்பது சந்தேகமே. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அர்னால்டுக்கு பதில் அமிதாப்பா? அல்லது அமிதாப்புக்கு புதிய கேரக்டரா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை

இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளதால், இந்த படத்திற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சமீபத்தில் மும்பையில் 3D ஷாட்கள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ‘பாகுபலி’ பட புகழ் ஸ்ரீனிவாஸ் மோகன் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்யவுள்ளார் என்றும் ஏற்கனவே அவர் தனது பணியை தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
English summary-Arnold Schwarzenegger to act in Enthiran 2 movie.