தற்போதை விஞ்ஞான உலகில் செல்போன் இல்லாதவர்கள் என்று யாருமே இல்லை. செல்போன் மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இருப்பினும் செல்போன்களில் சார்ஜை தக்க வைத்துக்கொள்வதில்தான் அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது. முக்கியமான நேரத்தில் பேட்டரி டவுன் ஆகிவிடுவதால் சார்ஜரை கையில் வைத்துக்கொண்டே செல்லும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டும் வகையில் ஆயுள் முழுவதும் இயங்கும் திறன் கொண்ட பேட்டரி ஒன்றை கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த பேட்டரி கிட்டத்தட்ட ஆயுள் முழுவதும் நீடித்து உழைக்கும் திறன் கொண்டது.
இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் போது சிறிதளவு மின்சாரமும் வீணாகது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரியில் மனித முடியை விட 1000 மடங்கு மெலிதானதாக இருக்கு நானோவையர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிகளவு சர்ஃபேஸ் ஏரியா கொண்டிருப்பதோடு எலெக்ட்ரான்களை சேமித்து டிரான்ஸ்ஃபெர் செய்ய ஏதுவாக இருக்கும்.
இந்த திட்டம் வெற்றி பெற்று இதன் விலையும் நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் இருந்தால் உலகம் முழுவதும் மிக விரைவில் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்ளெட் போன்ற கருவிகளை சார்ஜ் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பமானது 3 மாதங்களில் சுமார் 200,000 முறை சார்ஜ் செய்யப்பட்டதாகவும், இருப்பினும் பேட்டரியில் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary : California analysts discovered lifetime battery.